இத்தாலி விஜயம்

இத்தாலி விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரோமின் பியுமிசினோ விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அந்நாட்டின் விசேட பிரதிநிதிகளால் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆறாவது உலக வன வாரத்தை முன்னிட்டு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு மற்றும் வன பாதுகாப்பு சபையின் 24 ஆவது மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி நேற்று ரோம் நோக்கி பயணமானார்.

நிலைபேறான அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி நாளைய தினம், மாநாட்டில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

Sharing is caring!