இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் முழுவினர் நாட்டிற்கு திரும்பினர்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர், நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர்.

நேற்றிரவு 10.15 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர அதிகாரி குறிப்பிட்டார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்குப் பயணித்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்ததாக ‘தி ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் இந்தியா முன்னெடுக்கும் வீடமைப்புத் திட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது பிரதமர், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!