இந்தியா பயணமான விமானம் அவசரமாக கட்டுநாயக்காவில் தரையிறக்கம்

கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து மும்பாய் நோக்கி பயணித்த விமானம் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

138 பயணிகளுடன் நேற்று இரவு 11.47 மணியளவில் மும்பை நோக்கி பயணித்த யு.எல் 141 என்ற விமானம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பின்னர் அதிலிருந்த பயணிகள் வேறு ஒரு விமானம் ஊடாக இன்று (14) அதிகாலை 3.34 மணியளவில் மும்பை நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!