இந்த மாதத்துக்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது

விலை சூத்திரத்திற்கமைய இந்த மாதத்துக்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்று (10) மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான விபரம் நிதியமைச்சில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையினால், கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் இன்று வரை டீசல் மற்றும் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, விலை நிர்ணயக் குழுவினால் எரிபொருள் விலைத்திருத்தத் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் நிதியமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நிதி அமைச்சர் மங்கள சமவீர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

Sharing is caring!