இன்றிரவு விஷேட கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையே இன்றிரவு 7.00 மணிக்கு விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்போது, தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் நீதிமன்ற உத்தரவின் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

Sharing is caring!