இன்று அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல்கள் இரண்டு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) இடம்பெறவுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல். இந்தக் கலந்துரையாடல் மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அடுத்த கலந்துரையாடல் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல். இது இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் அடியாக இந்த கலந்துரையாடல்கள் இன்று இடம்பெறுகின்றன.

முன்னாள் பிரதமர் ரணிலுக்கு பிரதமர் பதவியை மீண்டும் வழங்குவதில்லையென்ற தீர்மானத்தில் ஜனாதிபதி காணப்படுகின்றார். இதனை சபதமிட்டும் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.முன்னணிக்கு ஆதரவு வழங்குவதனால் ஜனாதிபதிக்கு புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இந்நிலையிலேயே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!