இன்று பல இடங்களில் மின்வெட்டு

யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (10) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 5.30 மணி வரை யாழ். பிரதேசத்தில் ஆஸ்பத்திரி வீதி காரைநகர் சந்தியிலிருந்து கே.கே.எஸ்.வீதி சந்தி வரை, சீனிவாசகம் வீதி, சிவன்பண்ணை வீதியின் ஒரு பகுதி, கே.கே.எஸ்.வீதி, துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து சத்திரச் சந்தி வரை, சப்பல் வீதி, யாழ் 1 ஆம், 2 ஆம், 3 ஆம், 4 ஆம் குறுக்குத் தெருக்கள் வேம்ப சந்தி வரை, பிரதான வீதி துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து விஜிதா கபே வரை, யாழ் சிறைச்சாலை, யாழ் பொலிஸ் நிலையம், யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, இலங்கைத் தொலைத்தொடர்பு நிலையம், யாழ் பொது நூலகம், மாவட்ட நீதிமன்றக் கட்டடத் தொகுதி, தேசிய நீர்வழங்கல் வடிகால் சபையின் பிராந்திய முகாமையாளர் அலுவலகம், பிரம்படி கொக்குவில், மாவடி திருநெல்வேலி, யாழ். மருத்துவ பீட பிரதேசம், யாழ். மருத்துவ பீட அரங்கு, வாகையடி சந்தி மீசாலை பிரதேசம், டச் றோட் மீசாலை ஆகிய இடங்களிலும்கிளிநொச்சி பிரதேசத்தில் – கற்சிலைமடு, மன்னகண்டல், வித்தியாபுரம், தட்டையார் மலை, முத்து விநாயகர் புரம், முத்தையன்கட்டு, கனகரத்தினபுரம் ஆகிய இடங்களிலும்வவுனியா பிரதேசத்தில் -கோவில் குளத்திலிருந்து சிதம்பரம் வரை ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்படும்

Sharing is caring!