இன்று முதல் ஆரம்பமாகிறது கண்காணிப்பு பணிகள்!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான கண்காணிப்புப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை இந்த கண்காணிப்பு நடவடிக்கை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலை முன்னிட்டு மேலதிக குழுக்களும் களமிறக்கப்படவுள்ளதாக தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கண்காணிக்கும் மத்திய நிலையம் கூறுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் காவல்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

Sharing is caring!