இன்று முதல் 2018 தேசிய உணவுக் கண்காட்சி

2018 தேசிய உணவுக் கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கொழும்பு – தாமரைத்தடாக கலையகத்தில் இடம்பெறவுள்ளது.

விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு அபிவிருத்தி சபை இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

தேசிய உணவுப் பொருட்களை ஊக்குவித்து, அவற்றுக்கான சந்தை வாய்ப்பை அதிகரிப்பது இதன் நோக்கமாகும்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பானங்கள், மரக்கறிகள், பழ வகைகள் என்பன கண்காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

Sharing is caring!