இன்று யாழிற்கு விரையும் எயார் இந்தியா அதிகாரிகள்!

பலாலி – இந்தியா விமான சேவை ஆரம்பிப்பது குறித்து பேச்சுக்களை நடத்த எயார் இந்தியா விமானசேவையின் உயர்மட்ட அதிகாரிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாலியில் இருந்து தமிழ்நாட்டிற்கான விமான சேவை நடத்துவது குறித்து முன்னரே பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழில் பல்வேறு அரச தரப்புக்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடனும் அவர்கள் பேச்சு நடத்தவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முதற் கட்டமாக பலாலியிலிருந்து திருச்சிக்கான விமான சேவை நடைபெறுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sharing is caring!