இன்று (09) அதிகாலை முதல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும்

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று (09) அதிகாலை முதல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுவதால் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிகப்படுகின்றது.

திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நீர் விநியோகத்தை விரைவில் வழமைக்குக் கொண்டுவருவதற்கு எதிர்ப்பார்துள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!