இப்படியொரு சோதனை? கட்டுநாயக்கா விமான நிலையம் வரும் வெளிநாட்டவருக்கு தான்

இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிப்புறத்திலுள்ள மலசலகூடம் சுகாதார சீர்கேடா காணப்படுவதால் வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள், இலங்கை நாட்டவர்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாக அறிய முடிகிறது.

கட்டுநாயக்க வெளிப்புறத்தில் அமைந்துள்ள குறித்த மலசல கூடத்தை சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பாவனைக்குட்படுத்த முடியாத சூழ் நிலை நிலவி வருவதாகவும், அப்பகுதி எங்கும் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், குறித்த பகுதியில் புகையிலை பாவனை அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர குறித்த மலசல கூடத்தின் சில மீற்றர்கள் அண்மித்த பகுதியில் சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளின் அசமந்த போக்கால் இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் முகச்சுளிப்படைந்து வருகின்றனர்.

ஒருநாட்டின் முற்றமாக, வெளிநாட்டவரை வரவேற்கும் இடமான விமான நிலையத்தில் இவ்வாறான சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவது நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் செயல் என இலங்கையர்கள் விசனம் தெரிவிப்பதுடன், அரச அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

எனவே குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.

Sharing is caring!