இயற்கையின் சீற்றம் காரணமாக பெருந்தொகை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த சில தினங்களாக தாயகத்தில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றம் காரணமாக பெருந்தொகை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், வெள்ளத்தில் சிக்கியிருந்த அதிகமானவர்களை சிறிலங்கா கடற்படையினரின் மீட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை காரணமாக  கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வயல் காவலுக்குச் சென்றவர்களும் உதவிப் பணிகளுக்குச் சென்றவர்களும் வீடுகளில் இருந்தவர்களும் வெள்ளத்தில் சிக்கியிருந்தனர்.
வீடுகளுக்குள் இருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், மரங்களில் ஏறித் தப்பியிருந்த பலரையும் கடற்படையினர் படகுகள் மூலம் மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய பகுதியில் இருந்து பிறந்து சில நாட்களேயான குழந்தையும், தாயும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!