இரணைமடுக்குளம் நீர் பாய்தலின் பின்னணி

இன்றைய வெள்ளப்பெருக்கையும்,நம் மாகாண அரசும் ,அரசியல் தலைமைகளும் அலுத்து புலம்புவதை நினைக்க என்ன செய்வதென்று புரியவில்லை –

தமிழீழ நடைமுறை அரசின் உட்கட்டுமானம் எப்படி இருந்தது என்று அறிவீர்களா ?

வெறுமனே புலிகள் யுத்தத்தை தான் தோன்றி தனமாக நடத்தினார்கள்.கப்பம் பெறல் மற்றும் கொலைகளை மாத்திரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்துபவர்கள் புலிகளின் இந்த உட்கட்டமைப்பு திட்ட வரைபை அறிந்து இருக்க சாத்தியம் இல்லை.

புலிகள் தமது தேசக்கனவில் முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும் தமது ஆளுகையில் இருந்த பிரதேசங்களில் இருந்து கொண்டு ஒட்டு மொத்த தமிழீழத்திலும் ஒரு நடைமுறை அரசை நடத்தி கொண்டு தான் சென்றார்கள்.

புத்தளம் உட்பட ஒன்பது மாவட்டங்களை 20 மாநிலங்களாக பிரித்து அபிவிருத்திக்கான ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.இங்கு அபிவிருத்தி என்ற சொல் வெறுமன கட்டட நிர்மாணம் அல்ல.

“நிலைத்து நிற்கும் தற்சார்ப்பு அபிவிருத்தி – கூடவே சூழல் காப்பு”

புலிகளின் போக்குவரத்து அபிவிருத்தியில் மூன்று முக்கிய விடயங்கள் எண்ணக்கருவில் இருந்தன.

பெருந்தெருக்கள்
புகையிரதப்பாதைகள்
விமான நிலையங்கள்
சர்வதேச விமான நிலையங்களாக பலாலி விமான நிலையம் ,திருகோணமலை சீனான் குடா விமான நிலையம் பரிந்துரையில் இருந்தன.

உள்ளூர் விமான நிலையங்களாக மண்டை தீவு,மாங்குளம்,மன்னார்,வவுனியா,மட்டக்களப்பு ,அம்பாறை ஆகிய இடங்கள் தெரிவு செய்யப்பட்டு இருந்தன.

மிக தூர நோக்குடன் இந்த இடங்கள் தெரிவு செய்யப்பட்டு இருகின்றன எனபது வட கிழக்கின் இட அமைவையும் வளங்களையும் தெரிந்தவர்களால் உணர முடியும்.

கடற் போக்குவரத்தும் துறைமுகங்களும்

இதற்காக தனி திட்ட வரைபே உத்தேசிக்க பட்டு இருந்தது.இதில் மிக முக்கியமாக மூன்று விடயங்கள் கருத்திலெடுக்கப்பட்டன.

பொதுசன போக்கு வரத்து
ஏற்றுமதி /இறக்குமதி
மீன் பிடித்தல் போன்ற கடல் வளங்களுடன் சம்பந்தப்பட்ட தொழில் துறைகள்
ஏற்றுமதி ,இறக்குமதிக்கான துறைமுகங்களாக திருகோணமலை ,காங்கேசன்துறை,முல்லை தீவு,அறுகங்குடா,மன்னார் தெரிவு செய்யப்பட்டன.

இந்த இடத்தில் புலிகள் சூழல் மீது இயற்கை மீது காட்டிய அதீத அவர்களின் அறிக்கையில் இருந்த சில வசனங்களை மேற்கோள் காட்டுவது மூலம் புரிய வைக்கலாம்.

04.08.1993 நடைபெற்ற கூட்டத்தில் மடு மாநகருக்கு மடு பிரதேசம் தலைநகர் என்று முடிவு செய்யப்பட்டது.இதை மீளாய்வு செய்து மடு என்பதை மடு ரோட்டு பகுதிஎன்ற இடத்துக்கு மாற்றவேண்டும்.இதற்கான காரணம்.

மடு வளம் நிறைந்த காட்டு பிரதேசம் .இந்த அபிவிருத்தி நகரமாக மாற்றினால் வன வளங்களை அளிக்க நேரிடும்.தேசத்துக்கும் மண்ணுக்கும் இது பாரிய இழப்பு.

மடு வணக்கஸ்தல புனித பிரதேசத்தின் புனித தன்மை நகர மயமாக்கல் மூலம் கெட்டு விட கூடாது.

இப்படி ஒரு நிஜ தேசம் உருவாக முன்னரே தூர நோக்குடனும் அதே வேளை புற அக காரணிகளாகிய சூழல்,பண்பாடு,வளங்கள்,மக்கள், சர்வதேசம் என அத்தனையும் கவனத்தில் எடுத்து மீளாய்வுகளுக்கு உட்படுத்தி நிலைத்த அபிவிருத்தி உடன் கூடிய தற்சார்பு தேசம் ஒன்றுக்கான திட்ட வரைபை புலிகள் 1997 இலே வெளியிட்டார்கள்.

கண்டிப்பாக இது சர்வதேசத்துக்கு வைக்கப்பட்ட சவாலும் எச்சரிக்கையும் தான்.ஒரு வேளை இவர்களின் தேசம் உதித்து இருக்குமானால் அந்த தேசம் தோற்றம் பெற்று 3 தொடக்கம் 4 ஆண்டுகளில் ஜப்பான்,சிங்கபூரை மிஞ்சிய தேசமாய் அமேரிக்கா ,கனடாவை போன்ற பலமான தேசமாய் ஒரு தேசம் தெற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டு இருக்கும் .

துர்பாக்கியம் ,அத்தனையும் நந்தி கடலில் மௌனிக்கப்பட்டு விட்டது ,அல்லது இன்னொரு பரிமாணத்துக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு விட்டது.காலமும் தற்கால ஈழ தமிழர்களும் தான் இந்த மௌனிக்கப்ப்ட்ட தொடர்சியின் வெளிப்பாட்டை எந்த வகையில் அமைய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.

பொதுவாக கடலிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டவை கேட்காமலே திருப்பி கொடுக்கபடுவது வழமை.அந்த இயல்பு நந்தி கடலுக்கும் பொருந்தும்.

Sharing is caring!