இரண்­டாம் அத்­தி­யா­யமே வெற்றி அத்­தி­யா­யம் :மகிந்த ராஜ­பக்ச

பெப்­ர­வரி பத்­தாம் திகதி கிடைத்த வெற்­றி­யின் இரண்­டாம் அத்­தி­யா­யத்­துக்கு தற்­போது நாம் வந்­துள்­ளோம். அதை விளை­யா­டு­வ­தற்கு தயா­ரா­கு­மாறு கேட்­டுக்­கொள்­­கின்­றேன். இரண்­டாம் அத்­தி­யா­யமே வெற்றி அத்­தி­யா­ய­மாக அமை­ய­வுள்­ளது. அதன் பின்­னர் நாம் மீண்­டும் மகிந்த சிந்­த­னையை நாட்­டில் முன்­னெ­டுத்­துச் செல்­வோம் என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.

கொழும்­பில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கடந்த உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் எமக்­குப் பெரு­வெற்றி கிடைத்­தது. அது சரித்­திர முக்­கி­யத்­து­வ­மிக்க வெற்­றி­யா­க­வு­முள்­ளது. தேசிய மற்­றும் பன்­னாட்டு ஊட­கங்­க­ளில் சரித்­திர முக்­கி­யத்­து­வ­மிக்க வெற்­றி­யாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.எம்மை துடைத்­தெ­றி­வ­தற்கு முன்­னெ­டுக்­கப்­பட்ட திட்­டங்­கள் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அர­சி­யல்­வா­தி­கள் மக்­க­ளு­டன் இருக்­கும் வரை­யில் அவர்­களை தோற்­க­டிப்­பது இல­கு­வாக அமை­யப்­போ­வ­தில்லை.

கடந்த காலங்­க­ளில் எம்­மைத் தோற்­க­டிப்­ப­தற்கு பொய்­யான பரப்­பு­ரை­களை மேற்­கொண்­ட­னர். அதன் மூலம் தமிழ், முஸ்­லிம்­களை எம்­மி­ட­மி­ருந்து தூர­மாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­த­னர். தற்­போ­தும் எம்­மீது பழி­வாங்­கலை முன்­னெ­டுத்­துச் செல்­கின்­ற­னர்.

தற்­போது வடக்­கின் நிலமை எவ்­வா­றுள்­ளது? வடக்­கில் சட்­டம் இல்லை. பொலி­ஸா­ருக்கு அங்கு செல்ல முடி­யாது. அந்த நிலமை பற்றி மக்­க­ளால் முறை­யி­ட­வும் முடி­யா­துள்­ளது. தனிப்­பட்ட முறை­யில் எம்­மி­டம் மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். மக்­க­ளால் சுதந்­தி­ர­மாக வீதி­யில் செல்ல முடி­யாது.

தென்­னிந்­திய சினி­மாப் படங்­க­ளைப் போல் கிரா­மத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கின்­ற­னர். நிர்­வா­கம், தலை­வர்­கள், அரசு, பொலிஸ் என்று எது­வும் அங்­கில்­லாத ஏற்­பட்­டுள்­ளது.

இன்­றைய நிகழ்­வில் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­தா­பய ராஜ­பக்­கச கலந்து கொண்­ட­தை­யிட்டு சந்­தோ­ச­ம­டை­கி­றேன். ஏனெ­னில் ராஜ­பக்ச சகோ­த­ரர்­கள் சண்­டை­யிட்­டுக் கொள்­வ­தாக சிலர் குறிப்­பி­டு­கின்­ற­னர் – என்­றார்.

Sharing is caring!