இராஜகிரியவில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை கொழும்பு – இராஜகிரியவில் இன்று நடைபெற்றது.

இராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தொழிற்சங்க கூட்டு கமிட்டியின் பொதுச்செயலாளர் எம்.இராமநாதன், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. விஜயகுமாரன் உள்ளிட்டோர் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தனர்.

இன்றைய தினம் நடைபெற்ற கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி
எவரும் கலந்து கொண்டிருக்கவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகங்கள் வினவிய போதும் எவரும் பதில் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!