இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வு

யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களின் போது 68 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

தாக்குதலில், கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் உள்ளிட்ட 21 ஊழியர்களும், நோயாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டமை நினைவுகூரத்தக்கது.

இதனை முன்னிட்டு தம்மை விட்டு பிரிந்தவர்களை நினைவுகூறும் வகையில் இன்று காலை வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்வொன்று இடம்பெற்றது.

யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியர்கள், தாதியர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Sharing is caring!