இராணுவ தளபதி பெருமிதம்….இராணுவத்தை மறக்க கூடாதாம்

இலங்கையில் சமாதானத்தை உண்டாக்கவும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் இராணுவத்தினர் பணியாற்றினர். அவர்களுடைய தியாகத்தை மறக்ககூடாது. என கூறியிருக்கும் இராணுவ தளபதி மகேஸ்சேனநாயக்க, பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தின் வழி காட்டலில் யாழ்ப்பாணம் மாநக சபைக்கு அண்மி த்த பகுதியில் அமைக்கபட்ட தகவல் தொழில் நுட்ப வள மையம் இன்று காலை திறந் து வைக்கப்பட்டது. அதில் அவர் தெரிவித்ததாவது,

இராணுவத்தினரால் வழங்கப்படும் சேவைகளில் கண்ணிவெடி அகற்றலும் ஒரு பகுதி யாக உள்ளது. நாட்டில் 2020 ஆம் ஆண்டு கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட் டு கண்ணி வெடி அற்ற நாடாக மாற்றப்படும்.

புதிய தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டு செல்கிறது.அ தற்கு ஏற்ற வகையில் நாமும் வளர வேண்டும்.ஆனால் அதனை அழிவுப் பாதைக்கும் நாம் கொண்டு செல்லக் கூடாது. தற்போது இளைஞர்கள் மத்தயில்

போதை பொருள் பாவனை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப் படுத்துவதற்கு நாம் ஒன்றாகச் செயற் பட வேண்டும் என்றார். நிகழ்வில் சர்வ மத தலைவர்களின் ஆசி யுடன் கணனி ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது.

இதில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், அரச அதிகாரிகள் இராணு வத்தினர் , பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Sharing is caring!