இரு­தய சத்­திர சிகிச்­சை­யினை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்ட இரு­தய நெஞ்­சறை சத்­திர சிகிச்சை நிபு­ணருக்கு பாராட்டு

யாழ்.போதனா மருத்­து­வ­ம­னை­யில் இரு­தய சத்­திர சிகிச்­சை­யினை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்ட இரு­தய நெஞ்­சறை சத்­திர சிகிச்சை நிபு­ணர் மட்­டு­வி­லைச் சேர்ந்த சிதம்­ப­ர­நா­தன் முகுந்­த­னுக்குத் தென்­ம­ராட்சி பிர­தேச மக்­கள் முன்­னெ­டுத்த மதிப்­ப­ளிப்பு நிகழ்வு , நேற்று சாவ­கச்­சேரி சிவன் கோவில் சாலை­யில் உள்ள தென்­ம­ராட்சி கலை­மன்ற கலா­சார மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது.

இவ­ரின் கல்­லூ­ரித் தோழ­னும் கோப்­பாய் ஆசி­ரிய பயிற்­சிக் கலா­சாலை பிரதி அதி­ப­ரு­மான செந்­த­மிழ்ச் சொல்­ல­ருவி ச.லலீ­சன் தலை­மை­யில் நிகழ்­வு­கள் இடம்­பெற்­றன.

பிர­தேச மக்­கள் ஒன்­றி­ணைந்து சாவ­கச்­சேரி சிவன் கோவி­லி­லி­ருந்து விழா நாய­கன் தம்­பதி மற்­றும் அவ­ரது தாயார் ஆகி­யோரை ஊர்­வ­ல­மாக விழா மேடைக்கு அழைத்து வந்­த­னர்.

நிகழ்­வின் வர­வேற்­பு­ரை­யினை சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி அதி­பர் ந.சர்­வேஸ்­வ­ர­னும் , ஆசி­யு­ரை­யினை சாவ­கச்­சேரி முத்­து­மாரி அம்­பாள் கோவில் முதன்­மைக் குரு சிவ­சிறி க.வீர­பத்­தி­ரக் கு­ருக்­கள் சாவ­கச்­சேரி கத்­தோ­லிக்க பங்­குத் தந்தை அருட்­பணி றெக்ஸ் சௌந்­தரா அடி­க­ளாரும் நிகழ்த்­தி­னர்.
முதன்மை உரை­யினை வட­ மா­காண முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரன் நிகழ்த்­தி­னார்..

பாராட்­டு­ரை­களை வட­மா­காண சபை உறுப்­பி­னர் கேச­வன் சயந்­தன், யாழ்.பல்­க­லைக்­க­ழக முன்­னாள் துணை­வேந்­தர் பேரா­சி­ரி­யர் வசந்தி அர­ச­ரட்­ணம், தென்­ம­ராட்சிப் பிர­தேச செய­லர் திரு­மதி தேவந்­தினி பாபு, யாழ்.போதனா மருத்­து­வ­மனை உணர்­வ­ழி­யி­யல் மருத்­துவ நிபு­ணர் சு.பிரே­ம­கி­ருஷ்ணா, சாவ­கச்­சேரி மருத்­து­வ­மனை பொறுப்­ப­தி­காரி ப.அச்­சு­தன் , யாழ்.போதனா மருத்­து­வ­ம­னை­யில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் நடை­பெற்ற முத­லா­வது இரு­தய நெஞ்­சறை சத்­திர சிகிச்சை மேற்­கொண்ட முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த சரண்­கு­மார் உட்­பட பலர் உரை­யாற்­றி­னர்.

மருத்­துவ நிபு­ண­ரின் சேவை­யி­னைப் பாராட்டி பிர­தேச மக்­க­ளால் ‘முகுந்­தம்’ என்­னும் நூல் வெளி­யீ­டும் இடம்­பெற்­றது.

Sharing is caring!