இறக்குமதி பால்மாவிற்கு புதிய விலை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு புதிய விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை தொடர்பில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினூடாக பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு புதிய விலை சூத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர், அரசாங்கம் மற்றும் பால்மா உற்பத்தியாளர்கள் ஆகியோர் நன்மை பெறும் வகையில் இந்த புதிய விலை சூத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விவசாயம், கிராமிய பொருளாதார , கால்நடை அபிவிருத்தி, நீர்பாசன, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!