இறைச்சி விற்பனை நிலையம் திடீரென தீப்பற்றியெரிந்தது

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தில் இன்று மதியம் திடீரென தீப்பற்றியெரிந்தது.

வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தின் மின்மானியில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் திடீரென தீப்பற்றியெரிந்தது.

அவ்விடத்தில் நின்ற பொதுமக்கள் உடனடியாக செயற்பட்டு மண்ணை கொண்டு வீசி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த தீ விபத்தினால் எவ்வித உயிராபத்துக்கள், ஏற்படவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!