இலங்கைக்கு வந்த விந்தை

குருநாகல் – முத்தேட்டுகல பிரதேசத்தில் உள்ள நெல் வயலில் மேகத்தைப் போன்ற பொருள் காணப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று அதிகாலை அப்பகுதி பரந்த நிலையில் காணப்பட்ட குறித்த பொருள் சூரிய ஒளி வெளிவர ஆரம்பித்தும் கரைந்து சென்றதாக அப்பிரதேச மக்கள் கூறினர்.

அதனை கையில் எடுக்கும்போது கரைந்து செல்லும் இயல்பை பார்க்க முடிந்ததாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

அனர்த்த முகமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச்சென்று பார்வையிட்டுள்ளனர்.

Sharing is caring!