இலங்கையர்களுக்கு விசேட விசா

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்காத நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட விசாவை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இந்த விசேட விசா அனுமதிப்பத்திரத்தை வழங்கவுள்ளதாக குடிவரவு, குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என். ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

விசேட விசாவை பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான சட்டமூலம் தற்போது தயார் செய்யப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Sharing is caring!