இலங்கையர்கள் 09 பேரை நாட்டிலிருந்து இலங்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்திருந்த இலங்கையர்கள் 09 பேரை அந்நாட்டிலிருந்து வெளியேற்றி இலங்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்றுக்  காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் சகலரும் யாழ்ப்பாணம், வவுனியா உட்பட வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த ஆண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுடன் அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிகமானோரும் அந்த விமானத்தில் வருகை தந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேசிய இரகசிய தகவல் பிரிவு மற்றும் விமான நிலைய குற்றத் தடுப்புப் பிரிவு என்பவற்றின் அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Sharing is caring!