இலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 480 மில்லியன்

இலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 480 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மிலேனிய சவால்கள் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதியுடன் நேற்று கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே, 8,000 கோடி ரூபாவை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கான சட்டரீதியான அனைத்து அனுமதிகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவற்றை எதிர்வரும் நாட்களில் ஐக்கிய நாடுகளின் செனட் சபையில் கையளிக்கவுள்ளதாகவும் ப்ரோக் பியர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு இதன்போது நன்றி தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டத்திற்கு அமெரிக்காவின் நிதியை முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!