இலங்கையின் சட்ட ரீதியிலான பிரதமர் ரணில்
சர்வதேச சமூகம் ரணில் விக்ரமசிங்கவையே இலங்கையின் சட்ட ரீதியிலான பிரதமராக ஏற்றுக் கொள்வதாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் அந்நாட்டு கொன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹியுகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நேற்றைய (30) சபை அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளதாக சகோதார ஊடகமொன்று அறிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரிடம் வினா எழுப்பியுள்ள ஸ்வயர் இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பில் தாம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S