இலங்கையின் முன்னாள் பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தன்னைக் கொலை செய்ய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சதித்திட்டத்தில் ஈடுபட்டாரென இராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்தார் ரணில்.

நேற்றையதினம் இது தொடர்பில் சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்ட ரணில் மகிந்தானந்தாவின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

தான் சதித்திட்டங்களில் ஈடுபடும் ஒருவன் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது சமுக ஊடகங்களில் பரவிவரும் தொலைபேசி உரையாடல்கள் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சி.டிக்களில் இருந்து வந்ததாகத் தெரிவிகிறது.இந்தப்பதிவுகள் தற்போது சமுக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் பரப்பப்படுகின்றன.அவை ஊடகங்களிலும் எம்.பிக்கள் கைகளிலும் எப்படி சென்றடைந்தன என்பது பெரிய கேள்விக்குறி என ரணில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரப்பப்படும் ஒலிப்பதிவுகளை பொலிஸாரிடமிருந்து பெற்று சபாநாயகர் ஆராயவேண்டும்.எந்த எம்.பியாவது சட்டத்தை மீறியிருந்தால் இந்தச்சபைக்கு தெரியப்படுத்துங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Sharing is caring!