இலங்கையில் பனி மழை !

டிசம்பர் மாதம் குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்படும் அழகிய நுவரெலியாவில் மேலும் அழகு சேர்க்கும் வகையில் பனி மழை பொழியும் காலம் இது, அந்த வகையில் நேற்று அதிகாலை 07/01/2019 நுவரெலியா சினிசிட்டா மைதானம் முழுவதும் வர்ணம் தீட்டியதைப் போல் ஐஸ் மழை காணப்பட்டது.

இதனால் அன்றாடத் தேவைகளுக்கு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், அத்தோடு விவசாயிகள் தமது விவசாயக் காணிகளில் உள்ள மரக்கறி வகைகளை இப் பனியில் இருந்து பாதுகாப்பதற்கு பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக பனி மழை பெய்தால் இனி வரும் வாரங்களில் மரக்கறி தட்டுப்பாடும் ஏற்படலாமென விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்திருப்பதால் ஓரிரு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது இவ்வாறு பனிமழை பெய்வதைப் பார்ப்பதற்கு வெளிநாட்டவர்களும் அதிகாலை வேளையில் நிறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!