இலங்கையில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயங்கள்

இலங்கையில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயங்களை யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாம்பழ உற்பத்தி வலயங்கள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியுடன், நடைமுறைப்படுத்தப்படும் நவீன விவசாய திட்டத்தின் கீழ் இந்த மாம்பழ உற்பத்தி வலயம் அமைக்கப்படவுள்ளதுடன், இதன்மூலம் ஒரு இலட்சம் சிறந்த ரக மாங்கன்றுகள் செய்கையிடப்படவுள்ளன.

Sharing is caring!