இலங்கையில் வாராவாரம் எரிபொருட்களின் விலை மாற்றம் ஏற்படலாம்

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்கும் போது இலங்கையில் எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் காரணமாக எதிர்வரும் மாதங்களில் தொடர்ந்தும் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கல்கமுவ, எஹெட்டுவெவ பண்டாரகம பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

Sharing is caring!