இலங்கை அரசியல் குழப்பத்திற்கு தீர்வு?

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில், ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இன்று மாலை இந்தச் சந்திப்புகள் அதிபர் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 6 மணியளவில் பேச்சு நடத்தவுள்ளார்.
அதையடுத்து, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான- ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிசாத் பதியுதீன் உள்ளிட்டோருடன், மாலை 7 மணிக்கு பேச்சு நடத்தவுள்ளார்.
தற்போதைய அரசியல் நெருக்கடிகளைத் தீர்க்கும் புதிய முயற்சிகளில், இந்தச் சந்திப்புகள் முக்கியமான திருப்பமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!