இலங்கை இளைஞருக்காக குற்றவியல் நீதி வீசாவை பெற நடவடிக்கை

தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தி அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான மொஹமட் நிசாம்தீனுக்காக புதிய குற்றவியல் நீதி வீசாவை பெறுவதற்கு அந்த நாட்டின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாணவர் வீசாவில் சென்றுள்ள அவர், ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவித்து கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது வீசா காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

எனவே மாணவர் வீசாவிற்கு பதிலாக குற்றவியல் நீதி விசாரணையின் ஊடாக அவரை அந்த நாட்டில் தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள முயற்சிக்கப்படுகிறது.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Sharing is caring!