இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தீர்மானம்

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் உடனடியாக தீர்மானமொன்றை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் W.D.லக்ஷ்மன் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, தமது அறிக்கையை நேற்று (10) ஜனாதிபதியிடம் கையளித்தது.

உடன்படிக்கையில் சட்டப்பூர்வமற்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உடன்படிக்கையில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் இலங்கைக்கு பாதகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை மீண்டும் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்குமாறு குழு பரிந்துரை செய்துள்ளது.

Sharing is caring!