இலங்கை தமிழர் சாதனை வெற்றி

முதல் முறையாக Mister Ocean போட்டியில் இலங்கைத் தமிழன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜெரோஷன் ஸ்மித் என்ற நபரே இப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த நபர் இப்பட்டத்தை பெறும் இலங்கையின் முதல் தமிழனாக தன்னை பதிவு செய்கொண்டார். அத்துடன் மொடலிங் உலகில் தமிழர்களின் பெயரையும் நிலைநாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி உலக அளவில் நடைபெறவிருக்கும் போட்டியிலும் இலங்கை சார்பாக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

அடுத்த மாதம் சீனாவில் நடைபெறவுள்ள உலக அளவிலான Mister Ocean போட்டிக்கு இலங்கை சார்பாக கலந்து கொண்டு இப்பட்டத்தை வென்று உலக அளவில் தமிழனின் பெயரை பதிவு செய்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெறவிருக்கும் இப் போட்டியில் கலந்து கொள்ள அதிகளவிலான செலவுகள் காணப்படுவதாகவும் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களையோ அல்லது தனி நபர்களையோ (Sponsor) எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் வேள்ட் (Mister World) இதற்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் Mister Ocean போட்டி பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!