இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஸவிற்கே – முத்து சிவலிங்கம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஸவிற்கே என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகர் முத்து சிவலிங்கம் தெரிவித்ததாவது,

இன்றைய காலநிலைக்குத் தக்கவாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் செய்யக் காத்திருக்கிறது. இந்த அரசாங்கம் வந்ததிலிருந்து ஒரு நிலையான அரசாங்கமாக அமையவில்லை. இது எப்போதும் ஆட்டம் கண்ட அரசாங்கமாகவே இருந்தது. இருந்தாலும் சில விடயங்களுக்கு வாக்களிக்கும்போது, மக்கள் பெரும்பாலான பா.உறுப்பினர்களுக்கே வாக்களித்தார்கள்.

ஆனால் இன்று நாட்டு நிலைமையைப் பார்க்கும்போது, மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில், மிகவும் மோசமாகவே இருக்கிறது. விசேடமா தோட்டத்தொழிலாளர்களை மோசமாகப் பாதிக்கிறது. நாங்கள் மஹிந்த ராஜபக்ஸவிற்கே ஆதரவு வழங்குவோம் எனக் குறிப்பிட்டார்.

Sharing is caring!