இலங்கை பெண்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெறும் சந்தர்ப்பம்!!

இலங்கை பெண்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெறும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஜப்பானில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்துடன்,வேலைவாய்ப்புகளை பெறும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும், ஐ.எம். என்ற ஜப்பான் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய இந்த தொழில் வாய்ப்புக்கள் கிடைக்க உள்ளது.

ஆட்களை பராமரிக்கும் தொழில் சம்பந்தமான 100 இக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலாளர்களுக்கு மாதம் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் தொழில் புரிய விரும்பும் விண்ணப்பதாரிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விற்பனை பிரிவில் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதற்கு அமைய ஜப்பானிய மொழி புலமையில் என் 4 தரத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால், அல்லது ஜப்பான் மொழியை கற்ற 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட யுவதிகள் இதற்கான விண்ணப்பத்தை மேற்கொள்ள முடியும்.

மேலதிக தகவல்கள் பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 011-2791814 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டும் விபரங்களை அறிய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!