இலங்கை பெண் ஒருவர் பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் கைது
இலங்கை பெண் ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் ஆவார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் அமெரிக்க டொலர்கள் மற்றும் சுவிஸ் பிரேங் போன்ற நாணயத்தாள்கள் உள்ளடங்குவதாகவும் அவற்றின் பெறுமதி 37 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா எனவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்று வருகின்றது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S