இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

வட மாகாணத்தின் சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் அரச மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் நேற்று (16) மாலை மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியை, தனியார் பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் பஸ் உரிமையாளர் ஆகியோர் தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Sharing is caring!