இலங்கை மக்களை தன்பக்கம் ஈர்க்க வைத்த தமிழ் இளைஞன்

52 மணித்தியாலத்தில் இலங்கை மக்களை தன்பக்கம் ஈர்க்க வைத்த தமிழ் இளைஞன் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞன் 3D ஓவியங்களை தத்துரூவமாக வரைந்த பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
வினோத் என்ற தமிழ் இளைஞனே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அவரது கலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
அவர் 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நாணயத் தாள்களை 3D வடிவில் வரைந்து அசத்தியுள்ளார்.
கலர் பென்சில்களை பயன்படுத்தி தத்துரூபமான ஓவியங்களை வரைந்து திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் செலவிட்ட நேரம் 52 மணித்தியாலங்களாகும்.
குறித்த ஓவியங்களை பார்ப்பதற்கு உண்மையான காட்சி ஒன்றை புகைப்படம் எடுத்துள்ளதனை போன்று உள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Sharing is caring!