இலங்கை மத்திய வங்கி இன்று முதல் சில நாணயக் குற்றிகளை அறிமுகப்படுத்தியுள்ளது

இலங்கை மத்திய வங்கி இன்று முதல் சில நாணயக் குற்றிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய 1 ரூபா, 2 ரூபா, 5 ரூபா மற்றும் 10 ரூபா ஆகிய நாணயக்குற்றிகள் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதியில் இருந்து வணிக வங்கிகள் ஊடாக புழக்கத்திற்கு விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நீண்டகால இருப்பு மற்றும் துருப்பிடிக்காத வகையில் புதிய நாணயக்குற்றிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நாணயக் குற்றிகளின் சுற்றளவு, கனம் ஆகியன பெறுமதி கூடும்போது அதிகரிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

புதிய நாணயக் குற்றிகள் இன்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியால் பிரதமர், நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவிடம் உத்தியோகப்பூர்வமாக பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கையளிக்கப்பட்டன.

Sharing is caring!