இலங்கை ரூபாய் சொற்ப அளவு பலமடைந்துள்ளது

இலங்கை ரூபாய் ஒன்றின் பெறுமதி டொலரின் விலையுடன் ஒப்பிடும் போது நேற்று (25) சொற்ப அளவு பலமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று(25) 170.39 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதனால் நேற்றைய தினம் ரூபாவின் பெறுமதி 0. 26 சதத்தினால் பலமடைந்துள்ளதாகவும் மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை கடந்த 21 ஆம் திகதி 170.65 ரூபாவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!