இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி 172 ரூபா 34 சதமாக மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணயமாற்று வீதங்களுக்கமைய, அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் வளைகுடா நாடுகள் பலவற்றின் நாணயப் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளன.

பஹ்ரேன் தினார் 452 ரூபா 59 சதமாகவும் குவைத் தினார் 563 ரூபா 50 சதமாகவும் காணப்படுகின்றது.

ஓமான் ரியால் 443 ரூபா 33 சதமாகவும் கட்டார் ரியால் 46 ரூபா 87 சதமாகவும் காணப்படுகின்றது.

Sharing is caring!