இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி – மத்திய வங்கி ஆய்வு

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை குறித்து மத்திய வங்கி ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.

மத்திய வங்கியின் சர்வதேச செயற்பாட்டுத் திணைக்களத்தினால் இந்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வங்கியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்போது, அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ஏனைய நாடுகளின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளதா இல்லையா என்பது தொடர்பிலும் ஆராயப்படுகின்றது.

வரலாற்றில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!