இலங்கை வரும் உயர்மட்ட சீன அதிகாரி!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் இய் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கை வெளியுறவு அமைச்சின் தகவல்படி வேறு ஒரு நாட்டுக்கு செல்லும் வழியிலேயே இந்த இலங்கை பயணம் அமைவதாக தெரியவருகிறது.

இதன்படி 13ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் இலங்கைக்கு வரும் சீன அமைச்சர் 14ஆம் திகதி இரவு 12.15 மணியளவில் நாட்டில் இருந்து புறப்பட்டு செல்லவுள்ளார்.

நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு வரும் உயர்மட்ட சீன அதிகாரியாக வாங் இய் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!