இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது தொடர்பில், பாடசாலை பாட விதானத்தில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை

இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது தொடர்பில், பாடசாலை பாட விதானத்தில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழலை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேசிய கல்வி நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலும் ஊழலைத் தடுப்பது தொடர்பிலும் பாடசாலை பாடவிதானத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.

பாடசாலை மட்டத்திலிருந்து, சிறந்த சந்ததியினரை உருவாக்குவதற்கு விசேட செயற்றிட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறியுள்ளார்.

இதற்காக ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Sharing is caring!