இல்லங்களை மீள கையளிக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உத்தியோகப்பூர்வ இல்லங்களை இதுவரையில் மீள கையளிக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரச நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 9 பேர் தமது உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து இதுவரையில் வெளியேறவில்லை என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.

உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து விரைவில் வெளியேறுமாறு, முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அங்கிருந்து வெளியேற முடியாமைக்கு நியாயமான காரணங்கள் இருப்பின் அது தொடர்பில் கவனத்தில் கொள்வதாகவும் அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

உத்தியோகப்பூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்காத சில அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

Sharing is caring!