உடைமைகளை அடித்து நொருக்கி சேதம் விளைவித்த இளைஞருக்கு மருத்துவம்

திடீரென பித்துப் பிடித்தவர் போல வீட்டிலிருந்தோரை தாக்கியும் உடைமைகளை அடித்து நொருக்கி சேதம் விளைவித்த இளைஞரை தெல்லிப்பளை மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்குமாறு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று உத்தரவிடப்பட்டது.

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞனுக்கு திடீரென பித்துப் பிடித்தவர் போல் வீட்டில் இருந்தோரை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.

அத்துடன் வீட்டில் காணப்பட்ட உடைமைகளையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளார்.இவரைப் பிடித்து கட்டி வைத்த பெற்றோர் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் இந்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்தினர்.இந்த இளைஞர் பித்துப் பிடித்தவர் போல காணப்பட்டதால் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், இவரை தெல்லிப்பழை மனநலச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Sharing is caring!