இனி இல்லை உணவுத் தவிர்ப்புப் போராட்டம்… மஹசோன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க

தன்னை விடுதலை செய்யுமாறு வேண்டி கடந்த ஆறு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மஹசோன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க நேற்று (17) தனது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எந்தவித குற்றச்சாட்டும் இன்றி தன்னை சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 11 ஆம் திகதி நண்பகல் முதல் இப்போராட்டத்தை ஆரம்பித்தார்.

கடந்த மார்ச் 5 ஆம் திகதி கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவத்தில் பிரதான சந்தேகநபரான அமித் வீரசிங்க கடந்த மார்ச் 10 ஆம் திகதி முதல் அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் ஆரம்பித்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை கைவிடுவதற்கான காரணம் என்னவென்பது இதுவரை அறியப்படாதுள்ளதாகவும் சகோதார தேசிய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!