உணவுப் பொருட்களை சலுகை விலையில் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களை சலுகை விலையில் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூபாவின் பெறுமானம் குறைவடைந்துள்ள போதிலும் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், அத்தியாவசியப் பொருட்கள் நுகர்வோருக்கு தற்போதுள்ள விலையில் வழங்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!