உணவு விஷமடைந்ததன் காரணமாக 54 பிள்ளைகள் வட்டவளை வைத்தியசாலையில்
உணவு விஷமடைந்ததன் காரணமாக 54 பிள்ளைகள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
அவர்களில் 19 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வட்டவளை -டெம்பல்டோ தோட்டத்தைச் சேர்ந்த 6 முதல் 13 வயது வரையான சிறுவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டத்திலுள்ள பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்படும் மேலதிக நேர வகுப்புகளின் போது வழங்கப்பட்ட உணவு விஷமடைந்துள்ளது.
உணவு விஷமடைந்ததால் பிள்ளைகள் மயக்கமுற்றதுடன், வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S